தமிழகம்

பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்து – ராமநாதபுரத்தில் SDPI கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்,ஜீன்.28:-

எஸ்.டி.பி.ஐ கட்சி ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக தமிழக அரசே பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்து உடனடியாக நடவடிக்கை எடு என வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் அரசு பேருந்து பணிமனை முன்பு நடைபெற்றது.மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது சுலைமான் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட துணை தலைவர் ஜஹாங்கீர் இமாம்,மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல்,மகளிர் அணி மாவட்ட தலைவர் ரம்ஜான் பேகம் ஆகியோர் சிறப்பு உரையாற்றினர்.மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத் தொகுத்து வழங்கினார்.முடிவில் மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக் நன்றி கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தலைவர் பெரியபட்டினம் எஸ்.ரியாஸ்கான் தலைமையுரை ஆற்றிய போது எடுத்த படம்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்களை படத்தில் காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button