தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் எஸ்.பி எச்சரிக்கை!!!

கடந்த 23.03.2022-ம் தேதி,20 வயது மிக்க இளைஞர் மற்றும் அவரது தோழி ஆகிய இருவரும் ஆட்டோ மூலம் அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடி காவல் நிலையத்திற்குட்பட்ட மூக்கையூர் கடற்கரை பகுதி மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றை பார்ப்பதற்காக சென்று கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது பத்மா ஈஸ்வரன், த/பெ. முத்து அறியப்ப தேவர்,வேப்பங்குளம், கமுதி,தினேஷ்குமார்,த/பெ. சுப்பையா, நத்தக்குளம்,திருச்சுழி தாலுகா, விருதுநகர் மாவட்டம்,அஜித் குமார், த/பெ.தர்மலிங்கம்,2/25, கிழக்குத் தெரு, பசும்பொன்,கமுதி ஆகியோர்,மேற்படி இருவரையும் வாளால் மிரட்டியும், அவரது தோழியை அருகிலிருந்த கருவ காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தும் மேற்படி இருவரிடமும் இருந்த தங்க செயின் 3- பவுன், 1/2 பவுன் தங்கத்தோடு, 2- தங்க மோதிரம் மற்றும் ஹரி கிருஷ்ணாவின் 20 கிராம் வெள்ளி செயின் மற்றும் 12-கிராம் எடையுள்ள வெள்ளி பிரேஸ்லெட், செல்போன்,ஏடிஎம் கார்டு மற்றும் பணம் ரூ.2000/- ஆகியவற்றை பறித்துக் கொண்டும், இருவரையும் கொலை மிரட்டல் விடுத்தும் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.மேற்படி இருவரிடமிருந்து பறித்த தங்க செயின்,வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பத்மா ஈஸ்வரன் தாயார் வில்லம்மாளிடம் கொடுத்து மறைத்து வைத்துள்ளனர்.மேற்படி சம்பவம் தொடர்பாக சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் பத்மா ஈஸ்வரன்,தினேஷ்குமார்,அஜித் குமார்,வில்லம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையானது ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிகளான பத்மா ஈஸ்வரன் (“A+” Category Rowdy), அஜித்குமார் ( “C” Category Rowdy) மற்றும் இதர குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்குவதற்கு போலீசார் கடும் ஆட்சேபனை தெரிவித்ததால், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்படவில்லை.இவ்வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் திறன்பட செயல்பட்டு வழக்கில் 39 சாட்சிகளை ஆஜர்படுத்தியுள்ளனர். இந்நிலையில்,நேற்று 16.05.2026ம் தேதி ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் குற்றவாளி என அறிவித்த நீதிபதி செல்வி.கவிதா குற்றவாளிகளான பத்மா ஈஸ்வரன்,தினேஷ்குமார் மற்றும்அஜித் குமார் ஆகியோருக்கு 30 வருட சிறை தண்டனையும்,அபராதம் பணம் ரூ.65,000/- வழங்கியும்,பத்மா ஈஸ்வரன் தாயார் வில்லம்மாள் என்பவருக்கு 2 வருட சிறை தண்டனையும்,அபராதம் பணம் ரூ.5,000/- வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.மேற்படி, தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளிகள் பத்மா ஈஸ்வரன்,தினேஷ்குமார் மற்றும் அஜித் குமார் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற விசாரணையை சிறப்பாக கையாண்டதற்காக வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளையும்,நீதிமன்ற காவலரையும் பாராட்டியும்,இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் விரைந்து தண்டனை பெற்றுத்தரப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button