ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருது:விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு…!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-
சமூகநலத்துறையின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் நல் ஆளுமைக்கான விருது (Chief Minister’s Best Practices Award) தகுதியான தனிநபர்களிடமிருந்து கருத்துருக்கள் வருகிற ஜீன் 30-ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நல் ஆளுமையில் சிறந்த பயன் எய்திட பணியாற்றியவர்கள் வெற்றிகரமாக புதிய யுத்திகள், புதிய முயற்சிகள் மற்றும் சிறந்த வழிமுறைகள் ஆகியவற்றை செயலாகியதன் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவை கிடைக்க சக பணியாளர்களை வழிநடுத்துவோர்,அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்க பணிபுரிந்தோர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜீன் 30-ஆம் தேதிக்குள் தங்களது விவரங்களை கருத்துருவாக தொகுத்து சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



