ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்:கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு…!

ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக வளாகத்தில் உணவு சேமிப்பு கிடங்கை பார்வையிட்டதுடன்,சேமிப்பு கிடங்கு வளாகத்தில் நெல்சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணியினை முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ராமநாதபுரத்தில் வேளாண்மை துறையின் மூலம் டான்விட் நிறுவனத்திலிருந்து 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உரம் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நாள்தோறும் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகள் தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பாஸ்கரமணியன்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருண் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



