ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்!!!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தில் ராஜ வம்ச சாம்பவர் குல பெருமக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக ,
2 கால யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், நடந்தது. பின்னர் யாக சாலையில் இருந்து சிவாச்சார்களின் வேத மந்திரங்கள் முழங்க அழகர்கோவில், ராமேஸ்வரம், காசி, உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் குடங்கள்
கோவிலை சுற்றி வலம் வந்து, கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு வேத மந்திரங்களுடன் குடம் குடமாக கலசங்களி
ல் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
இதில்,
சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்.எல்.ஏ. நகர செயலாளர் ரகுபதி,
பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சாமிநாதன். மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒருங்கிணைப்பாளர் கலையரசன். மற்றும்,சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். அவர்களுக்கு, புனித தீர்த்தம், பூஜை மலர்கள், மற்றும்அன்னதானமும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை,
ஸ்ரீ ராஜகாளியம்மன், திருக்கோவில் திருப்பணி குழு, ராஜ வம்ச சாம்பவர் குல பொதுமக்கள் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.



