மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்!!!

மதுரை மாவட்ட
ஆட்சித் தலைவர்
கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மேலும் மாற்றுத்
திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் நேரடியாக சென்று, கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பொதுமக்கள் (ம) மாற்றுத்
திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்
திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மதுரை அருகே பூமி பூஜை: அமைச்சர்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி,
மதுரை மாவட்டம்,
மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை ஊராட்சியில் உள்ள பெரியகுளம் கண்மாயினை ரூபாய் 7.73 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த கண்மாயில், தூர்வாரும் பணி,வடிகால் அமைப்பு, கரைகளை பலப்படுத்துதல் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல், நடைபாதையில் பேவர் பிளாக் அமைத்தல், மின் விளக்குகள் மற்றும் உள் நுழைவு நீர்க் குழாய் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.
மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்,
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குநர்)
வானதி ஆகியோர் உடன் உள்ளனர்.



