அத்திப்பட்டி கிராமத்தில் நாடக மேடை திறப்பு!!!

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி
மதுரை மாவட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டி கிராமத்தில்
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்
கே.ஜே. பிரவீன் குமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் உடன் உள்ளனர்.

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி,
மதுரை மாவட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை, தொடங்கி வைத்து துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடி, 20 பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர் அட்டைகளை வழங்கினார்.
மதுரை
மாவட்ட ஆட்சித் தலைவர்
கே.ஜே. பிரவீன் குமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க
தமிழ்செல்வன் ஆகியோர் உடன் உள்ளனர்.



