தமிழகம்மாவட்டச் செய்திகள்

சோழவந்தான் மற்றும் கீழ மாத்தூரில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்!!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் கீழமாத்தூர் திருவேடகம் தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் சோழவந்தான் வைகை ஆற்றங்கரை விசாக நட்சத்திரத்துக்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் பன்னீர் இளநீர் மஞ்சள் பொடி மா பொடி திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து ரிசப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா என்று பக்தர்கள் மனமுருக வேண்டினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சோழவந்தான் எம் வி எம் குழும சேர்மன் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி மயில், எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் சிவாலயத்தில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது கீழமாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் முன்னதாக நந்தி பகவானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் சமேத ஏலவாழ் குலழி அம்மன் கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநோத சுவாமி கோவிலிலும் மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலிலும் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை கோவில் பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button