ஜல் ஜீவன் திட்டத்தில் ‘ஊழல் சாக்கடை:மத்திய அரசின் நிதியைச் சுருட்டி கோடி பார்த்த கேடி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி முருகேசன்

ஜல் ஜீவன் திட்டத்தில் ‘ஊழல் சாக்கடை:மத்திய அரசின் நிதியைச் சுருட்டி கோடி பார்த்த கேடி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி முருகேசன்
ஊழல் பெருச்சாளி அதிகாரியால் மத்திய அரசு மீது பொதுமக்கள் அதிப்தி!!!
இராமநாதபுரம் மக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டிய திட்டத்தை,சுயநலத்திற்காகச் சீரழிக்கும் அதிகார அராஜகம்!!!
இந்தியக் கிராமப்புறங்களின் அடிப்படைத் தாகத்தைத் தீர்க்கும் ஒரு தேசிய லட்சியத் திட்டம் ஜல் ஜீவன் மிஷன்.ஆனால்,இராமநாதபுரம் மாவட்டத்தில்,இந்தக் கனவுத் திட்டம் வெறும் ‘ஊழல் சாக்கடைத் திட்டமாக’ மாறியுள்ளது.இதற்கு முக்கியக் காரணம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அதிகாரி ஊழல் பெருச்சாளி முருகேசன் என்பவர் அரங்கேற்றும் அப்பட்டமான முறைகேடுகளும்,அதிகாரத் துஷ்பிரயோகமும்தான்.
மத்திய அரசின் கோடிக்கணக்கான ரூபாய் நிதி கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,இந்த நிதியைத் தன் சொந்தச் சொத்தாகக் கருதி,இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்த ‘ஊழல் பெருச்சாளி’ முருகேசன்,ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் மற்றும் இராமநாதபுரம் எம்.எல்.ஏ.வான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் பெயரைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டும் வேலைகளை ஒதுக்கி,கொள்ளை லாபம் ஈட்டி வருகிறார்.

இந்தத் திட்டச் சீரழிவுகள் குறித்து யாராவது கேள்வி எழுப்பினால், அதிகாரி முருகேசன் அப்பட்டமாக பழியைத் தி.மு.க. எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீது சுமத்தி,தான் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.மத்திய அரசின் திட்டத்தில் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளரின் தலையீடு என்ன?-என்ற நியாயமான கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது அரசியல் அழுத்தம் அல்லது மறைமுக உடன்பாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.
சாலைகள் நாசம், மக்கள் அவதி: “கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும்” நிர்வாகம்:-
மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டும்,திட்டப் பணிகள் முறையாகவோ,பாதுகாப்பான முறையிலோ நடைபெறவில்லை.ஆங்காங்கே சாலைகளையும்,தெருக்களையும் தோண்டி குழாய் பதித்த பின்னர்,அதைச் சரியாகக் கூட மூடாமல் குண்டும் குழியுமாகக் கிடப்பதால்,பேரூராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளன.இதனால் தொடர் விபத்துகள் ஏற்படுவதுடன்,அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.மத்திய அரசின் நிதியை முறையாகப் பயன்படுத்தி,மக்களுக்குச் சேவை செய்யாமல்,இவர்களின் முறைகேடுகளால் நிதி சீரழிக்கப்படுவது “கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போல உள்ளது.
*₹40 கோடி முறைகேடு:சாயல்குடியில் வெடித்த சர்ச்சை:-
குறிப்பாக,இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் சுமார் ₹40 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் ஒரு அப்பட்டமான உதாரணம்.2024-க்குள் முடிக்கப்பட வேண்டிய இத்திட்டம், 2025-ன் இறுதி மாதங்களை நெருங்கியும் முழுமை பெறவில்லை.இதனால் கொதிப்படைந்த சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,முறைகேடுகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர் மற்றும் ஊழல் பெருச்சாளி அதிகாரி முருகேசனுக்கு எதிராகக் கண்டன சுவரொட்டிகளை ஒட்டிப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அந்த நோட்டீஸ்களில், “ஜல் ஜீவன் திட்டப் பணிகளில் ஒப்பந்தத்தின்படி பணிகள் நடைபெற வில்லை.முறைகேட்டில் ஈடுபடும் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு என ஆக்ரோஷமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.பொதுமக்களுக்குச் சேரவேண்டிய அடிப்படை வசதியான குடிநீர்த் திட்டத்திலேயே இந்தளவுக்கு முறைகேடு நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும்,வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் கோரிக்கை:மத்திய அரசு தலையிட வேண்டும்:-
இனிமேலும் வேடிக்கை பார்க்காமல்,நூற்றுக்கணக்கான கோடி நிதியை ஒதுக்கிய மத்திய அரசு உடனடியாக இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.உடனடியாக,இந்த ஊழல் பெருச்சாளி முருகேசன் மீதும்,முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து,மத்திய அரசே நேரடியாக ஒப்பந்ததாரர்களை நியமித்து ஜல் ஜீவன் திட்டத்தை விரைந்து முடித்துத் தர வேண்டும் என்பதே இராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.மேலும் இனியும் இந்த ஊழல் பெருச்சாளி அதிகாரி முருகேசன் மீது மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் ஒன்றான இந்த பொன்னான திட்டம் இருட்டடிப்பு செய்யப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.

.பிரவீன்குமார்



