தொண்டியில் மாற்றுக்கட்சியினர் த.மு.மு.க,ம.ம.கவில் இணையும் விழா:பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பேரூராட்சியில் த.மு.மு.க,ம.ம.க சார்பில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் த.மு.மு.க,ம.ம.க சேவை அறிந்து பல்வேறு மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி அனைவரையும் வரவேற்றார்.மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா முன்னிலையில் பல்வேறு கட்சிகள் இருந்த சகோதரர்கள் தங்களை மனிதநேய மக்கள் கட்சியில் உறுப்பினராக தன்னார்வமாக வந்து இணைத்துக் கொண்டனர்.மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா,மனிதநேய மக்கள் கட்சியின் சேவைகளை எடுத்துக் கூறினார்.நவாஸ்,அசன்,சாஹிப்,பாருக் அலி,கருமாணிக்கம் ஆகியோர்கள் த.மு.மு.க,மமகவின் சேவைகளை அறிந்து தங்களை இணைத்துக் கொண்டனர்.உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி,சால்வை அணிவிக்கப்பட்டது.

த.மு.மு.க மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா த.மு.மு.க தலைமை பிரதிநிதி மண்டலம் ஜைனுல் ஆபிதின் ஆகியோர் த.மு.மு.கவின் சேவைகளையும்,எதிர்கால பணிகளையும் எடுத்து கூறினர் வருகின்ற டிசம்பர் 6 ல் பயங்கரவாத எதிர்ப்பு நாளான டிசம்பர் 6 இராமநாதபுரத்தில் நடைபெறும் வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்பதற்காக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.அந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிகமான மக்கள் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் மீனவரணி மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி,தொண்டி செய்யது,அப்துல் காதர்,பேரூர் அலாவுதீன்,முகமது மைதீன்,இப்ராஹிம் சேனா கல்யாணம்,ஜலால்
நவ்பிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பட்டுக்கோட்டை,அதிராம்பட்டினம்,தொண்டி வழியாக அல்லது காரைக்குடி தொண்டி வழியாக இராமநாதபுரம்-இராமேஸ்வரம் இரயில் பாதை அமைத்து திருவாடானை தொகுதி மக்கள், மீனவர் விவசாய மக்களும் பயன் பெறும் வகையில் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட மத்திய,மாநில அரசு முன்வரவேண்டும்.தொண்டி வரலாற்று நகரம்,துறைமுக நகரம்,தொண்டி முஸ்லிம் கல்வி சங்கம் சார்பில் சிறு துறைமுகம் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது.அந்த இடம் கேட்பாரற்று கிடக்கிறது.தொண்டி அனைத்து சமுதாய மக்களுடைய நலன் கருதி ஒரு துறைமுகம் அமைக்க வேண்டும்.தமிழக முதல்வர் மு.க
ஸ்டாலின் சட்டமன்றத்தில் தொகுதிக்கு ஒரு ஸ்டேடியம் கொண்டுவரப்படும் அறிவிப்பு செய்தார்.அதன் அடிப்படையில் பல்வேறு தொகுதிகளுக்கு ஸ்டேடியம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.ஆனால் திருவாடானை சட்டமன்றத்தில் எல்லை பிரச்சினை காரணமாக திருவாடானை சட்டமன்ற தொகுதியில் எல்லையில் இராமநாதபுரத்தில் இருக்கின்ற ஸ்டேடியத்தை காட்டி திருவாடானை தொகுதிக்கு ஒதுக்கிய ஸ்டேடியம் எல்லை பிரச்சினை காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.அரசு கருணையோடு திருவாடானை தொகுதியில் தொண்டியில் அதற்கான இடம் இருக்கிறது.தமிழக அரசு மினி ஸ்டேடியம் தொண்டியில் கொண்டு வருவதற்கு ஆவண செய்ய வேண்டும்.மேலும் பள்ளி கல்வித்துறை சார்பாக ஒரு மினி ஸ்டேடியம் தொண்டி சையது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கட்டுவதற்கு ஆவண செய்யுமாறு தமிழக அரசை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் மனிதநேய மக்கள் கட்சி பேரூர் செயலாளர் பரக்கத் அலி நன்றி கூறினார்.



