தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமநாதபுரத்தில் தமிழர் அதிகாரம் ஆர்ப்பாட்டம்:பட்டியல் வெளியேற்றம் கோரி நடந்தது!!!

பூர்வீக தமிழ் குடியான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை எஸ்.சி.பட்டியலில் இருந்து வெளியேற்றக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து தமிழ்ச் சமூகங்களுக்கும் உரிய இடப்பங்கீடு வழங்க வலியுறுத்தியும்,
தமிழர் அதிகாரம் கட்சியின் தலைவர் அழகர்சாமி பாண்டியன் தலைமையில்
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறுவனத் தலைவர் இரா.சு.அழகர்சாமி பாண்டியன் கண்டன உரை ஆற்றினார். கோரிக்கையை வலியுறுத்தி
தமிழ்நாடு மண்ணுரிமை கட்சித் தலைவர் சாகின் பாத்திமா,அகில இந்திய அகமுடையார் மகாசபை தலைவர் ரஜினிகாந்த், தாய்நாடு மக்கள் கட்சி தலைவர் பூமி ராஜன்,சிங்கத்தமிழர் முன்னேற்றக்கழக மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை மாடசாமி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி மண்டல செயலாளர் ஜெரோன் குமார்,சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழக நிர்வாகி சேகர் ஆகியோர் உரையாற்றினர்.மாவட்ட தலைவர் மூர்த்தி, துணைத்தலைவர் பூமிநாதன்,மாநில ஒருங்கிணைப்பாளர் முருகேசன்,மாநில அமைப்பு செயலர் சிவக்குமார்,தேவேந்திர குல சங்க வட்டார நிர்வாகிகள்,தமிழர் அதிகாரம்,மாவட்ட,
ஒன்றிய நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button