இராமநாதபுரத்தில் “என் கனவு என் எதிர்காலம்”இணையதள சேவை:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்ட பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத்திட்டப் பயன்கள் பயனாளிகளுக்கு வழங்கி “என் கனவு என் எதிர்காலம்” இணையதளத்தின் சேவையை துவக்கி வைத்தார்.

இதனையொட்டி,இராமநாதபுரம் மாவட்டம்,எம்.ஜி.மஹாலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ,பரமக்குடி எம்.எல்.ஏ செ.முருகேசன் ஆகியோர் பங்கேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (சமூக பாதுகாப்புத்திட்டம்) மூலம் 2051 பயனாளிகளுக்கு ரூ.27,49,800/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் கூட்டுறவுத்துறை மூலம் 35 பயனாளிகளுக்கு ரூ.29,40,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 57 பயனாளிகளுக்கு ரூ.53,60,073/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 2151 பயனாளிகளுக்கு ரூ.1,10,49,873/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன்,இராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம்,இராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம்,மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



