இராமநாதபுரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர் விபத்தில் பலி:அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நிதி உதவி!!!

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் பலி. 5 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரையில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு கருமலை கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று காலை, முதுகுளத்தூர் அருகே கொழுந்துறையில் பகுதியில் 5 மாணவிகளை கல்லூரி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தேரிருவேலி வழியாக கீழக்கரை நோக்கி சென்றார்.திருஉத்திரகோசமங்கை சாலையில் எதிரே நெடியமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் மருதுபாண்டி (40) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது கல்லூரி வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த மருதுபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பேருந்து அருகிலிருந்த பண்ணை குட்டைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் பஸ்சில் இருந்த 5 மாணவிகள் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த கீழத்தூவல் போலீசார் காயமடைந்த மாணவிகளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியர் மருதுபாண்டி என்பவரின் இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சொந்த நிதியினை திமுக ஒன்றிய செயலாளர் பூபதிமணி,முன்னாள் ஒன்றிய செயலாளர் சரண்யா செல்வராஜ், சட்டமன்ற அலுவலக உதவியாளர்கள் சத்தியேந்திரன்,டோனி,ரஞ்சித்,இளைஞர் அணி நிர்வாகி ராமச்சந்திரன் ஆகியோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வழங்கினர்.



