தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தில் மிஸ்டர் சவுத் இந்தியா ஆணழகன் போட்டி:கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தேர்வு!!!

ராமநாதபுரத்தில் நடந்த மிஸ்டர் சவுத்
கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மிஸ்டர் சவுத் இந்தியா ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அப்லிப்ட்மென்ட் டைனமிக்ஸ் சார்பில் தார் கிளாஸிக் 2026, மிஸ்டர் சவுத் இந்தியா 2026, மிஸ்டர் ராம்நாடு 2026 ஆணழகன் போட்டி ராமநாதபுரத்தில் முதல் முறையாக இன்று நடந்தது.

இதில் 50,55,60, 65,70,75,80+, எடைப்பிரிவு போட்டிகளில்
120 வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் கட்டுமஸ்தான் உடல் அழகு திறனை வெளிப்படுத்தினர். இப்பிரிவுகளில் முதல் 3 இடம் பிடித்த 3 வீரர்களுக்கு ரூ.1000, ரூ.2000, ரூ.3000 பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த வீரர்கள் மிஸ்டர் சவுத் இந்தியா சாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். இதில் கோயமுத்தூரைச் சேர்ந்த பேச இயலாத, செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி சுலைமான் மிஸ்டர் சவுத் இந்தியா சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த முஹமது ரபி இரண்டாம் இடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பரிசுகளை வழங்க வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button