பேராவூரில் பா.ஜ.க சக்தி கேந்திரம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்!!!

ராமநாதபுரம் யூனியன் பேராவூர் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சக்தி கேந்திரம் சார்பில் “நாளை நமதே” “தமிழ்நாடும் நமதே” என்கிற தலைப்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் மாவட்ட பட்டியல் அணி தலைவர் சி.கே.பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் இளவரசன் முன்னிலை வகித்தார்.பேராவூர் கிளைத்தலைவர்கள் கவிபாரதி,பாலசுப்பிரமணியன்,வீரா ஆகியோர் வரவேற்றனர்.சிறப்பு விருந்தினர்களாக ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் கி.முரளிதரன்,மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் ஜி.குமார்,மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கடந்த ஆண்டுகளில் மத்திய பா.ஜ.க அரசு செய்த நலத்திட்டங்கள் குறித்தும்,தி.மு.க அரசு தொடர்ந்து கடைபிடித்து வரும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் விளக்கவுரையாற்றப்பட்டது.மேலும் பட்டியல் சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என அறிவித்து அரசாணை வெளியிட்ட பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கும்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு,பட்டியல் வெளியேற்றத்திற்கும் ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

முடிவில் மாவட்ட இளைஞரணி செயற்குழு உறுப்பினர் கோ.அழகுமணி நன்றி கூறினார்.இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க பட்டியல் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரீஸ்,பட்டியல் அணி மண்டல தலைவர் முனீஸ்வரன்,கிளை செயலாளர் பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.



