தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் ஒரு நாள் ஆங்கில பேச்சு பயிற்சி பட்டறை!!!

ராமநாதபுரம்,சேதுபதி அரசு கலைக் கல்லூரியும் நெக்ஸான் என்டர்பிரைசஸ்,சென்னையும் இணைந்து நடத்திய ஒரு நாள் ஆங்கில பேச்சு பயிற்சி பட்டறை சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை எடிலாவேட் சொல்யூஷன்ஸ்,சென்னை பயிற்சியாளர் பிரியங்கா லாரன்ஸ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு மற்றும் இலக்கணப் பயிற்சி அளித்தார்.இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி.சீனுவாசகுமரன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை தலைவர் முனைவர்  க.ஜெயமுருகன் மற்றும் பேராசிரியர்கள்,ராமநாதபுரம் நெக்சான் எண்டர்பிரைசஸ் கிளையின் பணியாளர்கள் செய்திருந்தார்.

இதில் ராமநாதபுரம்,முத்துப்பேட்டை கௌஷானல் கல்லூரி,ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரி எம்.ஜி.ஆர் கலைக் கல்லூரி போன்ற கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button