தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தில் துணை முதல்வர் பிறந்தநாளை முன்னாடி கிராமிய கபாடி போட்டி:தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகவை டாக்டர் கபில்தாஸ் ஏற்பாடு!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக தலைவர்,தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி,திமு.க தலைமை அறிவுறுத்தலின் பேரில் இளைஞரணி செயலாளர்,துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க இருவர்ண கொடியேற்றி,இனிப்புகள் வழங்கி ஏழை,எளிய மக்கள் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மதுரை ரோட்டில் அமைந்துள்ள ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர்,முன்னாள் யூனியன் சேர்மன் கே.டி.பிரபாகரன் அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகவை டாக்டர் கபில்தாஸ் ஏற்பாட்டில் செயற்கை ஆடுகளம் அமைத்து கிராமிய கபாடி போட்டி நடைபெற்றது.பிப்.27,28 மற்றும் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெற்றது.இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக ஐ.மு.மு.க மாநில துணைச் செயலாளர் சக்கரக்கோட்டை அன்வர் அலி,தொருவளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பஜீருதீன்,சமூக சேவகர் யாசர் அரபாத் உட்பட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இறுதிப் போட்டியில் சாது கருங்குளம் அணி நகரக்குடி அணியை 26:13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button