தமிழகம்மாவட்டச் செய்திகள்

திமுகவி-ற்கு வாக்கு சேகரித்த நவீன கருப்புசாமி!!!

ராமநாதபுரம் அருகே தாதனேந்தல் ஊராட்சியில் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” பிரச்சார நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகி பள்ளபச்சேரி ராஜேந்திரன் நவீன கருப்புசாமி வேடமணிந்து நூதன முறையில் திராவிட மாடல் அரசின் அனைத்து தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டது ராமநாதபுரம் மாவட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தி.மு.க தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,இளைஞரணி செயலாளர்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆணைக்கிணங்க,தி.மு.க தலைமை அறிவுறுத்தலின் படி “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” என்கிற தலைப்பில் ஸ்டாலின் மகளிர் படையினர் தமிழகம் முழுவதும் வீடு,வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்த பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி யூனியன் தாதனேந்தல் ஊராட்சியில் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” தேர்தல் பிரச்சாரம் மல்லல் முன்னாள் ஊராட்சி தலைவர்,திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய செயலாளர் க.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்டாலின் மகளிர் படையை சேர்ந்த பெண்களுடன் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர்,திரைப்பட நடிகர்,சமூக ஆர்வலர் பள்ளபச்சேரி ராஜேந்திரன் நவீன கருப்புசாமி வேடமணிந்து வீடு,வீடாக சென்று தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கி நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.இதில் மகளிர் விடியல் பயணம்,கலைஞர் மகளிர் உரிமைத்தொகை,தாயுமானவர் திட்டம் மூலம் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை,மீனவர்கள் நலத்திட்டம்,காலை உணவுத்திட்டம்,இல்லம் தேடி கல்வி,மக்களைத் தேடி மருத்துவம்,புதுமைப்பெண் திட்டம்,நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட தி.மு.க அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வீதிகள் தோறும் மேள,தாளங்கள் முழங்க நடனமாடி ஆவேசத்துடன் வந்த நவீன கருப்புசாமியை அப்பகுதி பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வரவேற்றனர்.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கருப்புசாமி கோவிலில் குறி சொல்வதை போல நூதன முறையில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விவரித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பனையடியேந்தல் முன்னாள் ஊராட்சி தலைவர்,ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் லதா வெள்ளி,ஸ்டாலின் மகளிர் படையை சேர்ந்த பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தி.மு.க அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தி.மு.க நிர்வாகி ராஜேந்திரன் தான் நடத்தி வந்த தமிழக மக்கள் எழுச்சி கழகம் என்ற கட்சியை தி.மு.கவில் இணைத்து,காஞ்சனா 2,கத்தி,துப்பாக்கி முனை உட்பட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து,ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு மற்றும் தமிழக ஆளுநருக்கு எதிராக நவீன கோடாங்கி,நாகரீக கோமாளி,இன்றைய அரசியல் நாட்டுநடப்பை நச்சுன்னு சொல்ல குறவன்,குறத்தி போன்ற விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி தி.மு.க-வின் தீவிர ஆதரவாளராக பணியாற்றி வந்த இவருக்கு தற்போது கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button