தமிழகம்மாவட்டச் செய்திகள்

முதல்வருக்கு நன்றி!!!

தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் 2% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார்.இதற்கு ஆசிரியர் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின்  மாநிலச்செயலாளர் சோ.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு  2% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசும் 2% அகவிலைப்படி உயர்வை அறிவித்து இருப்பது ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.கடந்த ஆட்சியில் அறிவிக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு, தேர்தல் காரணமாக அறிவிக்கப்படாமல் இருந்தது, தற்போது புதிய ஆட்சி ஏற்பட்டவுடன்  தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த 1.1.2026 முன் தேதிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஜனவரி,பிப்ரவரி,மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அகவிலைப்படியின் நிலுவைத் தொகையும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும்.தமிழக அரசு அறிவித்துள்ள 2% அகவிலைப்படி உயர்வால்,தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் 16 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்  பயனடைய உள்ளனர்.இதேபோல் ஆசிரியர் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் உட்பட அனைத்து கோரிக்கைகளையும் புதிய அரசு நிறைவேற்றித் தரும் என்பதில் ஐயமில்லை.ஆசிரியர்,அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button