ராமநாதபுரம்:புது பஸ் ஸ்டாண்டில் வாக்குவாதம்!!!

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கடைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக ஏற்படுவதாக நகராட்சி ஊழியர்கள் தற்காலிக கடைகளை அகற்ற முயன்ற போது நீதிமன்ற ஆணையைப் பெற்று கடை நடத்தி வருவதாக கூறி கடையை காலி செய்ய மறுத்து நகராட்சி ஊழியர்களிடம் கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடைகளை அகற்றாமல் நகராட்சி ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்தின் சுற்றுவட்டார பகுதிகளான ராமேசுவரம்,ஏர்வாடி,ஆர்.எஸ்.மங்கலம்,பரமக்குடி,திருவாடானை,கமுதி,முதுகுளத்தூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதுடன் வெளி மாவட்டங்களான திருச்சி,மதுரை,சென்னை,கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு மாநிலங்களு தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தின் வளாகப் பகுதிகளில் தின்பண்டம்,பழங்கள்,வெள்ளரிக்காய், கிழங்கு உள்ளிட்ட தற்காலிக சாலையோர கடைகள் பல செயல்பட்டு வருகின்றன.

இந்த சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், பயணிகளுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி,ராமநாதபுரம் நகராட்சி ஊழியர்கள் தற்காலிக கடைகளை அகற்றுவதற்காக இன்று வாகனத்துடன் வந்தனர்.அப்போது தற்காலிக கடை உரிமையாளர்கள் தாங்கள் பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல்,போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கடை நடத்தி வருவதாகவும்,ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தற்காலிக கடைகள் நடத்த நீதிமன்றம் உத்தரவளித்திருப்பதாக நீதிமன்ற ஆணையை காட்டி நகராட்சி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடைகளை காலி செய்யாமல் நகராட்சி ஊழியர்கள் திரும்பி சென்றனர்.இதனால் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.



