தமிழகம்மாவட்டச் செய்திகள்

“பாதுகாப்பான முகவை” போலீஸ் சூப்பிரண்டு அசத்தல்!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் மாவட்டம் முழுவதும் பிரத்யேகமாக “பாதுகாப்பான முகவை” என்ற திட்டத்தினை ஏற்படுத்தி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கிராம பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி திட்டமானது தென்மண்டல அளவில் முக்கியத்துவம் பெற்றதுடன், மாவட்டம் முழுவதும் அதிகளவில் CCTV கேமராக்களை பொருத்தி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் பெற்றள்ளது.

அனைத்து உட்கோட்ட காவல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள்,காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் ஆகியோர், அனைத்து தாய் கிராமம் மற்றும் குக்கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும்,சமூகத்தில் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக,கிராம/நகர முக்கிய தலைவர்கள்,உறுப்பினர்கள் ஆகியோருடன் தினசரி கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி திட்டத்தின் விளைவாக, 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை மாவட்டத்தில் 3000 சிசிடிவி கேமராக்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.இதன் தொடர்ச்சியாக,நேற்று 15.05.2026 அன்று தேவிபட்டினம் காவல்நிலையத்திற்குட்பட்ட அழகன்குளம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து கூட்டு முயற்சியின் பேரில்,அழகன்குளம் கிராமத்தின் முக்கிய இடங்கள் மற்றும் பிரதான சாலை பகுதிகளில் 32 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் நேரில் சென்று திறந்து வைத்தார்.மேலும்,சிக்கல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம்பாடல் மற்றும் சிவலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் 3 சிசிடிவி கேமராக்களும்,சாயல்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதிகளில் 8 சிசிடிவி கேமராக்களும் நிறுவப்பட்டு, மொத்தம் 43 சிசிடிவி கேமராக்கள் முழுமையாக பொருத்தப்பட்டு,கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button