தமிழகம்மாவட்டச் செய்திகள்
நவீன உபகரணங்கள் வழங்கல்!!!

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புகைப்பட பிரிவில் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினார்.இந்த நவீன உபகரணங்கள் மூலம் குற்றச் சம்பவ இடங்களை துல்லியமாக பதிவு செய்து விசாரணைகளுக்குத் தேவையான ஆதாரங்களை தரமான முறையில் சேகரிக்க உதவியாக இருக்கும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



