தமிழகம்மாவட்டச் செய்திகள்
கலெக்டர் ஆய்வு!!!


ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தேவிபட்டிணம் ஊராட்சியில் இன்று (21.05.2026) ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் தேவிபட்டிணம் ஊராட்சியில் கடற்கரை மற்றும் நவபாஷானம் பகுதியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்து, கடற்கரை அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து திட மற்றும் திரவ கழிவுகள் கடலில் கலக்காத வகையில் கண்காணித்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



