தவறாக பயன்படுத்தப்படும் RTI:ஊடக ஊழல் பெருச்சாளிகளுக்கு எச்சரிக்கை!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ஒரு சில ஊடக ஊழல் பெருச்சாலிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து காலை அஞ்சல் நாளிதழ், அதிரடி செய்தி புலனாய்வு இதழ் ஆசிரியர் சை.ஹக்கிம் சேட் மரைக்காயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் ஒரு சிலர் குறிப்பிடத்தக்கோர் அரசு அதிகாரிகளையும்,பொதுமக்களையும் மிரட்டி பணம் சம்பாதித்து வருவதாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது.இந்த புகார் மீது மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜுத் சிங் காலோன் ஐ.ஏ.எஸ்,மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் ஆகியோர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.வளர்ந்து வரும் நவீன காலத்திற்கேற்றார் போல் பத்திரிகையாளர்கள் ஊடக ஊழல் பெருச்சாலிகளாக உருவெடுத்து வருகின்றனர்.தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை நேரடியாக மிரட்டும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் போலி பத்திரிகையாளர்கள் பெருகியுள்ளது உண்மையில் வெட்கப்பட வேண்டிய விஷயம்.வருடந்தோறும் தினசரி அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் முழு நேர பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசால் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.இதில் சம்பந்தப்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மாவட்ட கலெக்டர்களுக்கு தகுதி வாய்ந்த பத்திரிக்கையாளர்களை பரிந்துரை செய்து இலவச பேருந்து பயண அட்டையை பெற்று கொடுப்பர்.அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இலவச பேருந்து பயண அட்டைக்கான கடிதம் கொடுக்கப்பட்ட நாள் முதல் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் தலை உருள ஆரம்பித்து விட்டது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.காரணம் கடிதம் கொடுக்கும் தகுதி வாய்ந்த பத்திரிக்கையாளர்கள் அனைவருக்குமே பராபட்சமின்றி பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு விடும்.இதில் அரசு சலுகைகளுக்காக மட்டுமே அவ்வப்போது தோன்றிய போலி பத்திரிக்கைகளுக்கும்,போலி ஊடக ஊழல் பெருச்சாளிகளுக்கும் கட்டாயம் சலுகை மறுக்கப்படும் என்பதே அரசு விதி.அந்த நொடி முதல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகி விடும்.எப்படியென்றால் தற்போது அரசின் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்த தொடங்கியுள்ள ஊடக ஊழல் பெருச்சாளிகளால் பி.ஆர்.ஓ என்ன செய்வதென்று விழி பிதுங்கி நிற்பதாக செய்தித்துறை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.சலுகைகள் மறுக்கப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி பிஆர்ஓவை நேரடியாக மிரட்டுவதும்,இன்னும் ஒரு படி மேலே சென்று பிஆர்ஓ மீது இல்லாத பொய்யை இட்டுக்கட்டி அவதூறுகளை பரப்பி வரும் அவல நிலையையும் காண முடிகிறது.மேலும் நடப்பாண்டில் மட்டும் பிஆர்ஓ அலுவலகத்திற்கு வரப்பெற்ற தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களை ஆராய்ந்து பார்த்தாலே அந்த சட்டம் எவ்வாறெல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை எளிதில் இனம் கண்டு விடலாம்.மேலும் நடப்பாண்டில் வணக்கம் தமிழகம்,தினக்குயில் ஆகிய இரண்டுக்கும் வழங்கப்பட்ட அலுவலக கடிதப்படி இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டது அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும்.அவை இரண்டிற்கும் இந்திய பத்திரிக்கை பதிவாளர் ஜெனரலில் பதிவு இல்லை என்பதை பிஆர்ஓவிற்கு மேற்கோள் காட்டி ஆதாரத்துடன் அந்த இலவச பேருந்து பயண அட்டைகளை வாபஸ் பெற வைத்ததும் எங்கள் நிர்வாகம்தான்.மேலும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சிலருக்கும் பத்திரிகையாளர் போர்வையில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டிருப்பதை மனுவாக பிஆர்ஓவுக்கு வழங்கியதும் நாங்கள்தான்.இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஊடக ஊழல் பெருச்சாளிகள் பிஆர்ஓவை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தாக்குவது அரசு அலுவலர்களின் பணியை தடுத்து நிறுத்தும் வகையிலான செயலாகவே பார்க்கிறோம்.உங்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் விளக்கம் வேண்டுமென்றால் எங்களை அலுவலகத்திலோ,அலைபேசியிலோ தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.நாங்கள் எதையும் சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம்.நாங்கள் எப்படி பிறர் குறையை சுட்டிக்காட்டுகிறோமோ அதே போல் எங்கள் குறையையும் சுட்டிக்காட்ட ஜனநாயக நாட்டில் பிறந்த ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் உரிமை உண்டு.மேற்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் இரண்டாம் நிலை ஊடக ஊழல் பெருச்சாளிகளையும்,அவர்களுக்கு ஐடியா கொடுத்து இயக்கும் ஒரு கட்சி சார்ந்த ஊடக ஊழல் பெருச்சாளியையும் அவரவர்கள் அலுவலக ரீதியாகவும்,நீதிமன்ற நடவடிக்கை மூலமாகவும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.எங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் ஜனநாயகத்தின் நான்காம் தூண் என அறிஞர்களால் வர்ணிக்கப்படும் பத்திரிக்கைத்துறை ஏற்கனவே ஒரு சிலரால் ராமநாதபுரம் மாவட்டத்தில் முச்சந்தியில் சந்தி சிரிக்கிறது.அதில் இன்னும் சில அயோக்கியர்கள் வருகையால் முற்றிலும் சீரழிந்து விடக்கூடாது என்பதே எங்களது முதன்மை நோக்கமாகும்.அதனால் என்ன பிரச்சினை வந்தாலும் சட்டரீதியாக சந்திக்க தயாராக உள்ளோம்.
பிஆர்ஓ-வுக்கு ஆசிரியரின் கோரிக்கை:-
செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வரும் லெ.பாண்டி அவர்களுக்கு வணக்கம்.நான் பொறுப்பேற்று நடத்தி வரும் காலை அஞ்சல் நாளிதழ் மற்றும் அதிரடி செய்தி இதழ் தொடர்பாக எந்த சலுகையும் எதிர்பார்த்து உங்களை அலுவலகம் வந்தோ,அலைபேசியிலோ மேற்கண்ட இதழ்களின் ஆசிரியரான நான் அணுகியதில்லை.இன்னும் சொல்லப்போனால் உங்களை நானோ,என்னை நீங்களோ ஒரு மரியாதை நிமிர்த்தமாக கூட நேரில் சந்தித்து பேசியதில்லை.இருந்தும் தகவல் அறியும் உரிமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதையும்,அதனால்தொடர்ந்து நீங்கள் விமர்சனத்திற்குள்ளாகுவதையும் ஒரு பத்திரிகையாளராக நான் வெளியிலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.நீங்கள் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அதிகாரிதான் தொடர்ந்து இதே போன்று துணிச்சலாக நேர்மையுடன் செயல்படுங்கள்.யாருக்கும் தயவு, தாட்சிணை பார்க்காதீர்கள்.சட்டம் என்ன சொல்கிறதோ அதன் படி சுதந்திரமாக செயல்படுங்கள்.இனி உங்களுக்கு வரும் ஒவ்வொரு எதிர்வினைகளுக்கும் சம்பந்தப்பட்ட நபர் 10 மடங்கு கூடுதல் எதிர்வினைகளை அனுபவிப்பர். அனைத்து தகவல்களையும் சேகரித்து கொண்டுதான் இருக்கிறோம்.இந்த பூனைகளுக்கு மணி நாங்கள் கட்டி கொள்கிறோம்.நீங்கள் உங்களது அன்றாட வேலைகளை மட்டும் பாருங்கள்.இதே போன்று நேர்மையுடன் செயல்படுங்கள்.நீங்கள் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் இதே பொறுப்பிலான அதிகாரிதான் என்பதை மீண்டும் தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.உங்களின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு எங்களது நிர்வாகம் என்றும் உறுதுணையாக நிற்கும்.யாரைப்பற்றியும் துளியும் கவலை கொள்ள வேண்டாம்.நடப்பது மக்களுக்கான,நேர்மையான அதிகாரிகளுக்கான தூய அரசு.இந்த அரசாங்கத்தில் உங்களுக்கும் நல்ல பெயர் மட்டுமே கிடைக்கும்.உங்களது துணிச்சலான நேர்மைக்கு எங்களது நிர்வாகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



