தமிழகம்மற்றவை

மதுரை:கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை…!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வாகனக் காப்பகம் உள்ளது. இன்று அதிகாலையில் அங்கு 17 வயது சிறுவன் அங்கு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அவரை ஓரு கும்பல் இன்று (மே 25) அதிகாலை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தது. அத்துடன் அந்த சிறுவனின் உடலை வாகனக் காப்பகத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே வீசி விட்டு தப்பிச் சென்றது.

மதுரையில் மக்கள் நெருக்கம் மிகுந்த மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் நடைபெற்ற கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், விரைந்து சென்று சிறுவனை உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் குபேந்திரன் என்பது தெரிய வந்தது. அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மதுரையில் அதிகாலையில் நடைபெற்ற இக்கொலை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button