தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமேசுவரத்தில் மீன்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள்:மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு…!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இன்று (11.06.2026) மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் மீன்வளத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீன் இறங்குதளம் பகுதியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன்,பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து மீனவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் ராமேசுவரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சென்று உணவு சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு உணவுப் பொருள்களின் இருப்பு குறித்த பதிவேடு ஆய்வு செய்ததுடன்,பொருள்களின் தரத்தன்மை குறித்தும் பார்வையிட்டு, உணவுப் பொருள்களை தேவையான அளவு கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ராமேசுவரம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ததுடன்,நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தவுடன் பணிகளை உரிய காலத்திற்குல் முடித்திடவும் பணிகள் நடைபெறும் போது அலுவலர்கள் ஆய்வு செய்து பணிகளின் தரத்தன்மையை உறுதி செய்து உரிய காலத்தில் முடித்திட வேண்டுமென அறிவுறுத்தியதுடன்,நகராட்சியில் உள்ள சாலைகளை நல்முறையில் பராமரிப்பதுடன் நகராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சின்னகுப்பன்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருண்,ராமேசுவரம் நகராட்சி ஆணையர் ஆண்டவர்,மீன்வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button