தமிழகம்மாவட்டச் செய்திகள்

சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளில்கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு!!!

இந்துக்களுக்கு ஒரு இயக்கம் இருக்கிறது என்று பாஜக சொல்லிக் கொள்கிறது ஆனால், கடந்த காலங்களில் சபரிமலைக்கு 48 நாட்கள் விரதம் இருந்து யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இன்று ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியான கொடுமை நேர்ந்திருக்கிறது.
இருமுடிகளை எடுத்துக்
கொண்டு விமானத்தில் பயணம் செய்யக்கூடாது என்று உத்தரவு வந்திருக்கிறது.

இதை வன்மையாக காங்கிரஸ் பேரியக்கம் கண்டிக்கிறது . இதை
உடனே, பிரதமர் அவர்களும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் தலையிட்டு எப்பொழுது போல் இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்த யாத்திரிகள் இருமுடி எடுத்துக்
கொண்டு பயணம் செய்வதற்கு விமானத்தில் அனுமதிக்க
வேண்டும்.
தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். அதற்காக ,
காங்கிரஸ் பேரியக்கம் தொடர்ந்து கோரிக்கை ஏற்று போராடிக் கொண்டிருக்கிறது. தூய்மை பணியாளர்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு இணையான சம்பள வழங்க வேண்டும் அதில் நியாயம் இருக்கிறது .
எடப்பாடியார், புள்ளி வரத்தோடு பேசுகிறாரா அல்லது எழுதி கொடுத்து பேசுகிறாரா என்று தெரியவில்லை. நான் திருப்பெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. திருபெரும்புதூர் பகுதியில் எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளன.
கடத்த நாலரை ஆண்டுகளில் எத்தனை வந்துள்ளனர் என்று எனக்கு தெரியும். தொழிற்சாலைகள் என்றால், ஆர் வெங்கட்ராமன். தொழில்துறை அமைச்சராக கிண்டி சிப்காட் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஏகப்பட்ட தொழில்
துறைகள் கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி களத்தில் நிறைய கொண்டுவரப்பட்டது.
மன்மோகன் சிங் ஆட்சி களத்தில் இந்தியாவில் நிறைய அந்நிய முதலீடு கொண்டுவரப்பட்டதில் அதில் முதுமை மனநிலமாக தமிழகம் விளங்குகிறது.
1996 இல் முதல் ஹூண்டாய் கம்பெனி கார் nissan கம்பெனி ஜெர்மன் நிறுவனம் மற்றும் செயின் கோபம் பிரான்ஸ் கம்பெனி ஆகியவை கொண்டு வந்தன தற்போது டாடா ஹைடெக் இன்சுரக்சர் ஐடி கம்பெனிகள் 350-க்கு மேற்பட்ட கம்பெனிகள் இங்கு உள்ளது.
எடப்பாடியார்,
வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
திமுக ஆட்சிக்காலத்தில் எவ்வளவு தொழிற்சாலை வந்துள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வளவு வந்துள்ளது என வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். நான், பதில் தாக்கல் செய்கிறேன் .
அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகமாக இருந்தால் நான் எனது பகுதி எம்எல்ஏ ராஜினாமா செய்கிறேன்.
திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்தாக இருந்தாக நிரூபித்தால் அவர் ராஜினாமா செய்யட்டும் என சவால் விடுகிறேன்.
நானும், வெள்ளை அறிக்கை தகவல் செய்கிறேன்.
அவரும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யட்டும். இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ்
பொருள் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது .
ஒன்றிய அரசின், ஜிடிபி யை விட தமிழக அரசின் ஜிடிபி உயர்ந்துள்ளது. எல்லாவற்றிலும் முதன்மையாக உள்ளது.
அன்பில் மகேஷ்,
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பின் தனியாக ஒரு வெப்சைட் ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே உள்ள செவி வழி கல்வி கற்றல் வழி கல்வி முறையில் புதுமையாக நடைமுறைக்கு வந்தாலும் தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒன்றிய அரசு கூட்டு விருது வழங்கும் அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது.
ஆனால், ஒன்றிய அரசு பங்களிப்பு எதும் வழங்கவில்லை பள்ளிக்
கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க ஒன்றிய அரசு ஏன் முன்வரவில்லை. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் வழங்கவில்லை. வேலைகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய காலணிகள் மற்றும் புத்தகங்கள் மாற்றுத்
திறனாளிகள் பழக வேண்டிய விவரங்கள் வெற்றி வழங்க ஒன்றிய அரசு நிதி தரவில்லை இதை கண்டித்து ஏன் பேசவில்லை.
எஸ். ஐ. ஆர். என்பது தேவையா ,
அதை ஆதரிக்கும் ஒரே கட்சி அதிமுக தான் அது எப்படிப்பட்ட கட்சி என்பது மக்களுக்கு தெரியும் மக்களுக்கான கட்சியாகவா அல்லது மக்களுக்கான எதிராக செயல்படும் கட்சியாக அதிமுக உள்ளது. டெல்லி எஜமானவர்களின் உத்தரவின் கீழ் செயல்படுகிறது .
திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரியும் என்ற அறிக்கை குறித்த கேள்விக்கு..
நான்கு முனைப் போட்டி ஏற்படுவதால், ஒரு கட்சி ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்கு இருந்தால் ஆட்சிக்கு எதிரான வாக்கு விழும் அந்த எதிர்மறை ஓட்டை யார் எடுப்பார்கள் எதிர்க்கட்சி தான் எடுப்பார்கள் ஆனால், தற்போது எதிர்க்கட்சியாக 2 3 கட்சிகள் உருவாகியுள்ளன.
அதை எதிர்க்கட்சிக்கு செல்லாமல் புதிய கட்சிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இந்தியா கூட்டணிக்கு அதிக வாக்குகள் உள்ளன .
எப்ஐஆர் யார் யாருக்காக எதிராக குரல் கொடுக்கிறார்களோ அதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்களும் ஒருங்கிணைந்து வரவேற்பு கொடுப்போம். காவிரிக்கு முல்லைப் பெரியாருக்கு எவ்வாறு ஒருங்கிணைத்து செயல்படுகிறார்களோ அதே போல் நாங்களும் முதலமைச்சர் பின்னால் எஸ்ஸார் ஆதரவு தெரிவிக்கிறோம் .
திமுக கூட்டணியின் வலிமையாக உறுதியாகவும் நாங்கள் உள்ளோம்.
சிலபேர் ஸ்டெர்லைட் செய்கிறார்கள்.
இதை யார் சொல்ல வேண்டும் என்றால் ராகுல் காந்தி சொல்ல வேண்டும் .
அகில இந்தியத் தலைவர் கார்கே சொல்ல வேண்டும். அல்லது தமிழக பொறுப்பாளர் தினேஷ் ஜோடகர் சொல்ல வேண்டும்.
ரோட்டில் போர் ஒருவர் சொல்வதை பத்திரிகை செய்தியாக வெளியிடுவது நல்லதல்ல .
ஆதாரமான செய்திகளை வெளியிட வேண்டும். இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை .
மேகதாது விகாரத்தில் ஓபிஎஸ் எவ்வாறு கையாண்டார். தமிழகத்தில் தேனும் பாலும் ஓடியது என்பதை அவர் முடித்து வைத்திருக்கலாமே.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
உச்ச நீதிமன்ற அனுமதி இல்லாமல் ஒரு செங்கல் கூட நட முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முல்லைப் பெரியாறு காவிரி போன்ற அனைத்து விவரங்களிலும் ஒத்துழையாகிறது.
ஒரு லட்சத்தி பத்தாயிரம் கோடி பீகாரில் உள்ள மக்களுக்கு வழங்கி உள்ளனர் .
அந்த மாநிலத்தில் மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த வறுமையை பயன்படுத்தி 10 ஆயிரம் பத்தாயிரம் கொடுத்து அவர்கள் வெற்றியை எடுத்துக் கொள்கிறார்கள்.
இதில் ,
எங்கே ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதற்கு என்றென்றும் காங்கிரஸ் குரல் கொடுக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறினார் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button