தே.மு.தி.க மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 பந்தக்கால் நடும் விழா:பொருளாளர் எல்.கே.சுதீஷ் துவக்கி வைத்தார்!!!

தேமுதிகவின் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” – பந்தக்கால் நடும் விழா
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) சார்பில், மாபெரும் “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” எதிர்வரும் 2026 ஜனவரி 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள பாசார் பேருந்து நிலையம் அருகே உள்ள “பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் திடலில்” நடைபெற உள்ளது.
இந்நிலையில்,மாநாடு நடைபெற உள்ள இடத்தில் கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் அவர்கள் நேரில் ஆய்வு செய்து,முகூர்த்தப் பந்தக்கால் நடும் பணியைத் துவக்கி வைத்தார்
இதில் மாநில நிர்வாகிகள் பார்த்தசாரதி, இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத், வெங்கடேசன் கிளை நிர்வாகிகள் சபியுல்லா வெல்டிங் முத்து
வீனஸ் செந்தில்
சேகர் K.K பச்சமுத்து நல்லூர் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து மாநாடு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாலை 02.45 மணியளவில் கழக பொதுச் செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கொடியேற்றி,கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.



