வாடிப்பட்டியில் உலக ஆக்கி கோப்பைக்கு வரவேற்பு அறிமுகம்!!!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில்14 வது ஆண்கள் ஆக்கி இளையோர் உலகக் கோப்பைக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு,
முன்னாள் இந்திய ஆக்கி அணி வீரர் மெரிட் என்ற வாடிப்பட்டி ராஜா அறிமுகப்படுத்தி பேசினார்.
தாய் பள்ளித்
தாளாளர் எஸ்.வி.காந்தி தலைமையில் தாக்கி விளையாட்டு வீரர்கள் வரவேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மதுரை மாவட்ட ஆக்கி சங்கத் தலைவர் ஏ. ஜி. கண்ணன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன்,முன்னாள் தமிழக ஆக்கி அணி கேப்டன் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதன் ஏற்பாடுகளை, வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கி சங்க செயலாளர் சிதம்பரம், துணைச் செயலாளர் சரவணன், வெள்ளை ச்சாமி, வீரகாளிதாஸ் உடல் கல்வி ஆசிரியர்கள் சுரேஷ், சந்திர மோகன் ஆகியோர் செய்து இருந்தனர்.
முடிவில், எவர்கிரேட் ஆக்கி சங்கத் தலைவர் பி. ஜி . ராஜா நன்றி கூறினார்.



