தமிழகம்மாவட்டச் செய்திகள்

காமராஜர் குறித்து அவதூறு:இராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் யூடியூபர் முக்தார் அஹமது மீது புகார்:நாடார் மஹாஜன சங்கம் சார்பில் அளிக்கப்பட்டது!!!

பெருந்தலைவர்,கர்ம வீரர்,தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து அவதூறு பேசிய யூடியூபர் முக்தார் அஹமது மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இராமநாதபுரம் மாவட்ட நாடார் மஹாஜன சங்கம் சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

புகார் அளிக்க வந்த நாடார் மஹாஜன சங்க நிர்வாகிகள்…

இதில் நாடார் மஹாஜன சங்க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் இளங்கோவன்,தலைவர் மணிகண்டன்,பள்ளி,கல்வி இணை செயலாளர் மோகன்,சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி துணைத் தலைவர் கு.குகன்,பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளர்,நகர்மன்ற உறுப்பினர் ஜி.குமார்,செயற்குழு உறுப்பினர்கள் பிரேமானந்த்,வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம்,வெள்ளரி ஓடை முன்னாள் ஊராட்சி தலைவர் எம்.சந்திரசேகர்,இளைஞரணி செயலர் கார்த்திகேயன்,கீழக்கரை நகர் தலைவர் பாலாஜி பிளாஸ்டிக்ஸ் எம்.சரவணன்,நகர் பொருளாளர் நாராயண மூர்த்தி,பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரெஜி சேதுபதி,பனங்காட்டு படை மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மிஸ்ரா,ம.தி.மு.க நகர் இளைஞரணி செயலாளர் காளிதாஸ்,பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சுமிதா,நாடார் பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் பி.ஜி.ஜெகன்,தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட இளைஞரணி தலைவர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button