அரே சாமி நல்லாத்தானே பண்ணுது:சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ!!!

இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம்,தாதனேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் திரைப்பட நடிகராகவும்,தி.மு.க கலை இலக்கிய பிரிவின் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
கலை,இலக்கியம் மற்றும் நாடகங்களில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர் ஆளும் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவாக பல்வேறு விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி,ஒன்றிய பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.நவீன கோடாங்கி என்கிற பெயரில் உடுக்கை அடித்து குறி சொல்லி விநோத நிகழ்ச்சி நடத்தி மத்தியில் ஆளும் ஒன்றிய பாரதிய ஜனதா அரசை எதிர்த்தும் வருகிறார்.அதனைத் தொடர்ந்து குறவன் வேடமிட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.

அந்த வீடியோ தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி எப்படி இருக்கு என்று ஒரு பெண்மணி கேட்க,அரே சாமி என்ன சொல்லுது இது நல்லாத்தானே பண்ணுது காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம்,இல்லம் தேடி கல்வி,பெண்களுக்கு உரிமைத் தொகை,மகளிர் விடியல் பயணம்,புதுமைப் பெண் திட்டம் என்று நிறைய பண்ணுது,அத கீழ கவர்னர் தடுக்குது,மேல மோடி என்ன புடுங்குது எனவும்,இப்ப புதுசா ஒரு கட்சி வந்திருக்கிறதே அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க என இரண்டாவது கேள்வியை கேட்க 41 பேரை கொன்னுடுச்சி,செத்த இலவுக்கு கூட போகல,தி.மு.க உருவாகி 75 வருஷமாச்சு,தவெக இப்ப வந்த அணில் குஞ்சு எனவும்,SIR பத்தி என்ன நினைக்கிறீங்க என மூன்றாவது கேள்வியை கேட்க நல்ல ஓட்டை தூக்கி,கள்ள ஓட்டை சேர்த்து பீகாரில் ஜெயிச்சாங்க,இப்ப தமிழ்நாட்டிலும் அதே மாதிரி வர பார்க்குறாங்க தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி இங்க ஆட்டவும் முடியாது,அசைக்கவும் முடியாது என்று முடியும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.



