இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது:லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த புகார்தாரர் ஒருவர் வேந்தோணி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தனது தாயார் பெயரில் கடந்த 20.11.2025 ஆம் தேதி பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்துள்ளார்.அந்த சொத்திற்கு புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் சம்மந்தமாக வேந்தோணி விஏஓ கருப்புசாமி (58/25) என்பவரை கடந்த வாரம் சந்தித்து விவரம் கேட்ட போது விஏஓ கருப்புசாமி பட்டா மாறுதல் செய்ய எனது லாகினுக்கு வரவில்லை வந்தவுடன் செய்கிறேன் என மனுதாரரின் போன் நம்பரை வாங்கியுள்ளார்.பின்பு சில நாள்கள் கழித்து மனுதாரரின் போன் நம்பருக்கு பட்டா பெயர் மாறுதலாகி விட்டதாக மெசேஜ் வந்துள்ளது.பின் வேந்தோணி விஏஓ மனுதாரருக்கு போன் செய்து நேரில் வந்து தன்னை பார்க்குமாறு மனுதாரிடம் கூறியுள்ளார்.
அதன்பின்பு சில நாள்கள் கழித்து மனுதாரர் விஏஓவை நேரில் சந்தித்து விவரம் கேட்ட போது விஏஓ மனுதாரரிடம் நான் பரிந்துரை செய்தால் தான் உங்க அம்மா பெயரில் பட்டா கிடைச்சது எனவே தனக்கு ரூ. 15000/-ம் கொடுக்க வேண்டும் என கறாராக கேட்டுள்ளார்.அதற்கு மனுதாரர் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என கூறியதற்கு விஏஓ கருப்புசாமி ரூ.2000/-ஐ குறைத்து நாளைக்கு காலையில் ரூ.13000/- ஐ தருமாறு மறுபடியும் கறாராக கூறியுள்ளார்.எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு
போலீசில்
புகார் செய்தார்.லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.13000/-ஐ விஏஓ கருப்புசாமியிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை நேற்று (09.12.2025) ஆம் தேதி கையும் களவுமாக பிடித்தனர்.மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்ததாவது:-
பொதுமக்கள் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான புகாருக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
துணை போலீஸ் சூப்பிரண்டு,9498215697;9498652169
இன்ஸ்பெக்டர் 1-9498188390
இன்ஸ்பெக்டர் 2-9600082798 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் இல்லாமல் உங்களுடைய கோரிக்கை சட்ட பூர்வமாக நிறைவேற்றி தரப்படும்.எனவே எந்த வித தயக்கம் இன்றி எங்களிடம் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



