டிச.12-ல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்:மாநில செயலாளர் விஜயகுமார் பேட்டி!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களை சந்தித்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் அரண்மனை விஜி (எ) விஜயகுமார் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் டிச.12 டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.


இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து நிதி வராமல் இருப்பதை கண்டித்தும்,100 நாள் வேலை திட்டத்தில் ஏழைகளுக்கு வேலை வழங்காமல் அவர்கள் வாழ்வாதாரத்தை கேலிக்கூத்தாக்கி வருவதையும்,ஊரக வளர்ச்சித் துறையில் பி.டி.ஓ தலைமையில் தனி கட்டமைப்பை ஏற்படுத்த கோரியும்,ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் அல்லல்படும் சூழ்நிலையில் நிர்வாக தொகையை 10% உயர்த்தி வழங்க கோரியும், எதிர்வரும் 12.12.2025 அன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சுமார் 300 பேர் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநிலத் தலைவர் ரமேஷ்,மாநில பொதுச்செயலாளர் ராஜசேகரன்,மாநில பொருளாளர் புகழேந்தி,செல்வக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



