திருப்புல்லாணி யூனியன் மேலமடை ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிகள் விருது:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற பி.டி.ஓ!!!

இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேலமடை ஊராட்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக நல்லிணக்கத்திற்காக விருது மற்றும் ரூ.1 கோடி நிதிக்கான காசோலை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து திருப்புல்லாணி யூனியன் பி.டி.ஓ சே.ராஜேஸ்வரி இராமநாதபுரம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவை சந்தித்து விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்,கல்வி,சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சாதி வேறுபாடின்றி சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சிகள் விருது மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக தலா ரூ.1 கோடி வீதம் அந்தந்த யூனியன் பி.டி.ஓக்களிடம் வழங்கினார்.இந்த 10 கிராம ஊராட்சிகளில் இராமநாதபுரம் மாவட்டம்,திருப்புல்லாணி யூனியன் மேலமடை ஊராட்சியும் ஒன்று.அந்த ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து சமுதாய மக்களும் சாதி,மத வேறுபாடின்றி அனைத்து வகையிலும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர்.அதன் படி தேர்வு செய்யப்பட்ட மேலமடை ஊராட்சிக்கு சமூக நல்லிணக்க கிராம ஊராட்சி விருது மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்புல்லாணி யூனியன் பி.டி.ஓ சே.இராஜேஸ்வரியிடம் கடந்த சனிக்கிழமை அன்று வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நேற்று இராமநாதபுரம் டி ப்ளாக் பகுதியில் உள்ள இராமநாதபுரம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏவை நேரில் சந்தித்த திருப்புல்லாணி யூனியன் பி.டி.ஓ சே.ராஜேஸ்வரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய விருது மற்றும் ரூ.1 கோடி நிதிக்கான காசோலை ஆகியவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றார்.



