இராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் மற்றும் மிளகாய் விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்:கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் மனு!!!

தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் நிறுவன தலைவர் எம்.எஸ்.கே.பாக்கியநாதன் தலைமையிலான விவசாயிகள் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இராமநாதபுரம் மாவட்டத்தில் 1.37 இலட்சம் ஹெக்டேரில் சுமார் 78000 ஹெக்டேர் பரப்பு அறுவடைக்காக இருந்த நெல்கதிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் மீண்டும் முளைத்து பயிர்களாக வளர்ந்து மிகப்பெரிய வருமான இழப்பை தந்துள்ளன.2024-2025 ஆண்டில் அழிந்த நெல் விவசாயிகளுக்கு ஒரு வருடமாக நிவாரணம் கிடைக்கவில்லை.
2024-2025 ம் ஆண்டில் தொடர்ச்சியாக மழை மற்றும் பல்வேறு நோய் தாக்குதல்களால் மிளகாய் விவசாயம் முழுமையாக அழிந்து விட்டன. 16500 ஹெக்டேர் பரப்பளவு பாதிப்புக்கு ஏற்ற வகையில் இதுவரை மிளகாய் அழிவுக்கான நிவாரணமோ? தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு தொகையையோ? வழங்கவில்லை
கமுதி ஒன்றியத்தில் தோப்படைபட்டி,நெறிஞ்சிபட்டி,புதுக்கோட்டை செங்கப்படை,சாமிபட்டி, இடையன்குளம்,கீழவலசை,சாமிபட்டி, சேர்ந்தகோட்டை,செங்கோட்டைப்பட்டி, பேரையூர்,கோவிலாங்குளம் பட்டி,பாம்புநாயக்கன்பட்டி, கரிசல்குளம்,ஊசம்பட்டல், உப்பங்குளம்,பாக்கு வெட்டி,கள்ளிகுளம்,இலந்தைக்குளம், கொண்டுலாவி,கடலாடி ஒன்றியம், சிக்கல்,சிறைக்குளம்,ஆய்க்குடி, பொட்டல்பச்சேரி,இதம்பாடல்,கீரந்தை பன்னந்தை பூலாங்குளம் உசிலங்குளம்,தனிச்சியம், குசவன்குளம்,கீழக்கிடாரம்,முதுகுளத்தூர்ஒன்றியம்,தேரிருவேலி, கடம்போடை,மட்டியரேந்தல், தாளியரேந்தல்,வளநாடு செங்கப்படை, மிக்கேல் பட்டிணம்,பிரபுக்களூர், உலையூர்,கருமல்,இளங்காக்கூர், திருவரங்கம்,சுவாத்தான்,சிறுதலை, நெடியமாணிக்கம்,கோடரேந்தல்,அ. பழங்குளம்,மல்லல்,பூசேரி,பொக்கரேந்தல்,முத்துவிஜயபுரம், முத்துச்செல்லபுரம்,செம்பொன்குடி, பேய்க்குளம்,தொட்டியபட்டி, புஸ்பவனம்,பொன்னக்கனேரி, மாரியூர்,பெரியகுளம்,பேய்க்குளம், புத்தேந்தல்,ஏர்வாடி,மிக்கேல்பட்டிணம்,சவேரியார் சமுத்திரம்,வீரம்பல், சவேரியார் சமுத்திரரம்,வீரம்பல், போன்ற கிராம விவசாயிகளுக்கு நெல்மற்றும் மிளகாய் விவசாயி சாகுபடி அழிந்து பெரும் வருமான இழப்புகளாலும் கடன் சுமைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே,இனியும் காலதாமதமின்றி நிவாரணம் மற்றும் தேசிய வேளாண் பயிர்காப்பீட்டு தொகை மற்றும் மிளகாய் அழிவிற்கான நிவாரணத்தொகையை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



