தமிழகம்மாவட்டச் செய்திகள்

இராமேஸ்வரம் நகராட்சியில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் கைவினை பொருட்களின் கண்காட்சி:சேர்மன் கே.இ.நாசர்கான் தொடங்கி வைத்தார்-பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற கண்காட்சி குழுவினர் அழைப்பு!!!

இராமேஸ்வரத்தில் மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் ராம்நாட் பனை ஒலை உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தும் கைவினை கலைஞர்களின் கைவினை பொருட்கள் கண்காட்சி நேற்று 12.12.2025 முதல் 21.12.2025 வரை 10 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இராமேஸ்வரத்தில் தங்கமயில் ஜூவல்லரி அருகில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மஹாலில் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் இராமேஸ்வரம் கே.இ.நாசர் கான் குத்துவிளக்கேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இராமேஸ்வரம் நகராட்சி சேர்மன் கே.இ.நாசர்கான் கலந்து கொண்டு தலைமையேற்று கண்காட்சியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இராமேஸ்வரம் சேர்மன் கே.இ.நாசர் கான் தலைமையுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மத்திய அரசு ஜவுளி அமைச்சகம் அலுவலர்,கைவினைப் பொருட்கள் சேவை மையம்,நாகர்கோவில் கே.சுனில் குமார்,இராமேஸ்வரம் நகராட்சி துணைத் தலைவர்,பிச்சை (எ) தட்சிணாமூர்த்தி,இராமேஸ்வரம் முன்னாள் நகராட்சி தலைவர் அர்ஜீனன்,இராமநாதபுரம் உழவர் சந்தை உதவி நிர்வாக அதிகாரி எஸ்.அண்ணாத்துரை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் இராமநாதபுரம் பனை ஓலை உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் பரமக்குடி கல்யாணி கார்த்திகேயன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் இராமேஸ்வரம் சேர்மன் கே.இ.நாசர் கான் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

பல்வேறு வகையான கைவினை பொருட்களுக்கான 20 பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் தலைசிறந்த கைவினை கலைஞர்களின் நேரடி விற்பனை நடைபெறும்.அனைவரும் வருகை தந்து பயன் பெறுமாறு கண்காட்சி குழுவினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button