டெல்லி எச்சரிக்கை!புதுச்சேரி மேடையில் அடங்கிய விஜய்!…!அமித்ஷா அலர்ட் காரணமாக பா.ஜ.க. விமர்சனம் மாயமா? – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!!!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் நடத்திய முதல் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. தமிழக அரசியலில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து வரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை அனல் பறக்க தாக்குவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.
ஆனால் மேடையில் நடந்தது முற்றிலும் மாறுபட்டது.
பா.ஜ.க. மீது தீ இல்லை…
கூட்டணி ஆட்சியின்மீது தாக்குதல் இல்லை…
அடக்கி வாசித்து மேடையை விட்டு இறங்கினார் விஜய்.
இந்த திடீர் மவுனம் அரசியல் வட்டாரங்களில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
டெல்லியிலிருந்து வந்த ‘அலர்ட்’!
புதுச்சேரி கூட்டத்திற்கு முன்பே, டெல்லியிலிருந்து விஜய்க்கு கடுமையான எச்சரிக்கை சென்றதாக மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் விளைவாகத்தான், பா.ஜ.க. ஆட்சியை நேரடியாக விமர்சிப்பதை விஜய் தவிர்த்தார் என்கிற தகவல் அரசியல் களத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க.வை மட்டும் தொடர்ந்து தாக்கி வரும் விஜய்,
“பா.ஜ.க. எங்கே?”
என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் போனதே இன்றைய அரசியல் பேசுபொருள்.
வியூக குழுவிடம் விஜய் சொன்ன பதில் என்ன?
இந்த விமர்சனங்களை விஜயின் வியூக குழு எடுத்துச் சென்றபோது, அவர் கூறியதாக சொல்லப்படுவது:
“ஆட்சியில் இருப்பவர்கள் தான் மக்களுக்கு பதில்சொல்ல வேண்டும்.
ஆளும் கட்சியைத்தான் விமர்சிக்க முடியும்.
அதனால் தி.மு.க. தான் இலக்கு.”
ஆனால் அரசியல் பார்வையாளர்கள் இதை ஏற்கத் தயாராக இல்லை.
ஆரம்பத்தில் அனல்… இப்போது மவுனம்!
அரசியலுக்கு வந்த ஆரம்ப நாட்களில்,
தி.மு.க. – பா.ஜ.க.
இரு கட்சிகளையும் சம அளவில் தாக்கிய விஜய்,
இப்போது பா.ஜ.க. விமர்சனத்தில் இருந்து முற்றிலும் விலகி நிற்கிறார்.
இது அரசியல் நியாயமா?
இல்லை டெல்லி பயமா?
புதுச்சேரி மேடை ஒன்று மட்டும் தெளிவாக சொல்கிறது:
“டெல்லி எச்சரித்தால்,
தமிழக அரசியலும் அடங்க வேண்டிய நிலை தான்!”
அமித்ஷாவின் எச்சரிக்கையால் விஜயின் அரசியல் பாதை கட்டுப்படுத்தப்படுகிறதா?
அல்லது இது வரவிருக்கும் பெரிய அரசியல் ஒப்பந்தத்தின் முன்னுரைதானா?
மவுனமே இப்போது மிகப் பெரிய சத்தம்.



