தமிழகம்மாவட்டச் செய்திகள்
இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக டீ கடைக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம்:உணவுப் பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!!!

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் படி,உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் என்.பி.சுரேஷ் மற்றும் இராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் எம்.ஜெயராஜ் ஆகியோர் புகாரின் அடிப்படையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டீக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.




ஆய்வின் போது அந்த கடையில் வடை,பஜ்ஜி,போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை செய்தித்தாளில் வைத்து வழங்கக் கூடாது என்றும்,பிளாஸ்டிக் கவரில் உணவு பொருட்களை பார்சல் செய்து கொடுக்கக் கூடாது என்றும்,வடை,பஜ்ஜி போடும் இடம் சுத்தமாகவும் மற்றும் கடையினை சுற்றி சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அந்த கடையின் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



