கைமாறிய 1200 கோடி… சிக்கும் முதல் குடும்பம் முதல் முக்கிய அமைச்சர் வரை…

சென்னையில் முக்கியமான கட்டுமான நிறுவனம் ஒன்று சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பு இடத்தை வாங்கி அந்த இடத்தில் கட்டுமான பணியை தொடங்கி இருக்கிறது. அந்த நிறுவனம் இந்த சொத்தை வாங்குவதற்கு முக்கிய இடத்திலிருந்து பல கோடி அந்த நிறுவனத்திற்கு கை மாறி இருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். குறிப்பாக வட சென்னை சார்ந்த திமுக முக்கிய புள்ளி ஒருவரின் இடமிருந்து மிகப்பெரிய அளவில் தொகை அந்த நிறுவனத்திற்கு மாறி இருக்கிறது என்கின்றார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வரி செலுத்தி பத்திர பதிவு செய்ய வேண்டுமானால் அதற்கு மொத்தம் 1500 கோடி செலவாகும். மேலும் இதே கட்டுமானம் நிறுவனம்தான் சென்னையில் பல இடங்களில் கட்டுமான பணியை தொடர்ந்து செய்து வருகிறது, இப்படி இந்த நிறுவன பல இடங்களில் பல கோடியை முதலீடு செய்து கட்டுமான பணிகளை செய்து வருவதால் அந்த நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்பொழுது சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பில் இடம் வாங்குவதற்கு அந்த நிறுவனத்திடம் நிச்சயம் போதுமான பணம் இருந்திருக்காது, அதுவும் இடம் மட்டும் 1200 கோடி என்றால், அடுத்து கட்டிடம் கட்டுவதற்கு இன்னும் பல கோடி செலவாகும், அப்படி இருக்கையில் இந்த தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு உறுதியாக மிகப் பெரிய அளவில் முதல் குடும்பம் முதல் முக்கிய அமைச்சர்கள் வரை பலருடைய பணம் இங்கே கை மாறி இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
குறிப்பாக ஓ பன்னீர்செல்வம் ஒரே நாளில் முதல்வர் மு க ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்தார், ஒருமுறை வாக்கிங் செல்லும் பொழுதும் அடுத்த அதே தினத்தில் வீட்டிலும் சென்று சந்தித்தார், இந்த சந்திப்பு கூட ஓ பன்னீர்செல்வம் சொந்தமான பணம் ஒரு கட்டுமான நிறுவனத்திடம் சிக்கிக் கொண்டதாகவும் அவர்கள் தராமல் இழுத்து அடித்துக் கொண்டதாகவும், முதல்வர் மு க ஸ்டாலின் தலையிட்டு உதவி அந்த ஓ பன்னீர்செல்வத்தின் பணத்தை பெற்று தருவதற்கு உதவி கேட்டு தான் ஓபிஎஸ் முதல்வரை சந்தித்தார் என்றும்,
முதல்வர் முக ஸ்டாலினும் அதற்கான உதவியை செய்ததாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.ஓபிஎஸ் பணம் சிக்கிக்கொண்ட அதே நிறுவனம்தான் தற்பொழுது 1200 கோடி மதிப்பில் இடத்தை வாங்கி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள், குறிப்பாக முக்கிய அமைச்சர்கள் கையில் பணத்தை வைத்திருக்க முடியாது என்பதால் இது போன்ற கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதாகவும்,
மேலும் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் முக்கிய புள்ளியான தம்பி என்கிற நபரை அமலாக்கத்துறை சுற்றி வளைத்த போது, அந்த சோதனையிலிருந்து அமலாக துறையில் சிக்க விடாமல் காப்பாற்றி தனி விமானம் மூலம் லண்டனுக்கு அனுப்பி வைத்ததும் இதே கட்டுமான நிறுவனத்தை தான் என்றும் கூறப்படுகிறது.
இப்படி பிரபலமான கட்டுமான நிறுவனத்தில் முக்கிய அமைச்சர் முதல் முதல் குடும்பம் வரையிலான பணம் மிக பெரிய அளவில் கைமாறி இருக்கும் தகவல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்துக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மொத்த டேட்டாவும் உளவுத்துறை மூலம் அமித்சாவின் பார்வைக்கு சென்று உள்ளதால் விரைவில் அமித்ஷா தன்னுடைய ஆட்டத்தை தொடங்குவார் என்கிறது டெல்லியில் இருந்து வரும் தகவல் உறுதி படுத்துகிறது.
ஏற்கனவே இரண்டு கட்டுமான நிறுவனர்களில் அதிரடி சோதனையை அமலாக்கத்துறை நடத்தியது, இந்நிலையில் விரைவில் முக்கிய அமைச்சர் வரை முதல்வர் வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படும் கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெறும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.



