இராமநாதபுரத்தில் நாளை மாலை சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் தென் மண்டல தேர்தல் ஆலோசனை கூட்டம்!!!

இராமநாதபுரம் பாரதிநகர் பீமாஸ் வைஸ்ராய் நளபாக கூட்ட அரங்கில் சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் 2026 தென்மண்டல தேர்தல் ஆலோசனைக் கூட்டம் சமத்துவ மக்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளரும்,நாடார் பேரவையின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளருமான எம்.விஸ்வநாதன் தலைமையில்,நாடார் பேரவை இராமநாதபுரம் மாவட்ட தலைவர் கே.வேல்முருகன் ஏற்பாட்டில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்கு நாடார் பேரவை இராமநாதபுரம் மாவட்ட தலைவர் கே.வேல்முருகன்,சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகின்றனர்.நாடார் பேரவை மாநில அவைத்தலைவர் டி.ஜார்ஜ்,சமத்துவ மக்கள் கழக மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ராஜேஷ் குமார்,நாடார் பேரவை மாவட்ட செயலாளர் வேல்.மோகன்தாஸ்,சமத்துவ மக்கள் கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜான்.தே.டென்னிஸ், நாடார் பேரவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராகுல் வாசன்,சமத்துவ மக்கள் கழக மாவட்ட பொருளாளர் அஸ்வின் முருகதாஸ்,மண்டபம் ஒன்றிய செயலாளர் எம்.கார்த்திக்,மண்டபம் ஒன்றிய நாடார் பேரவை தலைவர் பால முனீஸ்வரன்,நாடார் பேரவை இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் அஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவர்,சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை தலைவர்,முன்னாள் எம்.எல்.ஏ சமத்துவ செம்மல் எர்ணாவூர் அ.நாராயணன்,சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞரணி செயலாளர் அ.நா.கார்த்திக்,மாநில பொதுச்செயலாளர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன்,தலைமை நிலைய செயலாளர் எஸ்.தங்கமுத்து,மாநில பொருளாளர் எம்.கண்ணன்,மாநில துணைத்தலைவர் டி.தனுஷ்கோடி,மாநில துணைச்செயலாளர் ஆர்.காமராசு,மாநில தொழிலாளர் அணி செயலாளர் எஸ்.ஜெபராஜ் டேவிட்,மாநில இலக்கிய அணி செயலாளர் அ.அந்தோணி பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.சமத்துவ மக்கள் கழக மாவட்ட அவைத்தலைவர் ஐ.அங்குச்சாமி நன்றியுரை நிகழ்த்த உள்ளார்.
இக்கூட்டத்திற்கு சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை மாவட்ட,நகர,ஒன்றிய,பேரூர்,கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று ஆலோசனை வழங்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளரும்,நாடார் பேரவையின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளருமான எம்.விஸ்வநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாடார் பேரவை இராமநாதபுரம் மாவட்ட தலைவர் கே.வேல்முருகன் சிறப்பாக செய்து வருகிறார்.



