இராமநாதபுரத்தில் பி.கே ஏஜென்சி திறப்பு விழா:பேங்க் ஆப் மஹாராஷ்டிரா மேலாளர் திறந்து வைத்தார்!!!

இராமநாதபுரம் மாவட்டம்,இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மஞ்சனமாரியம்மன் கோவில் தெருவில் பாட்டாளி மக்கள் கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகம் அருகே பி.கே ஏஜென்சி Chil Us கோலி சோடா கம்பெனி திறப்பு விழா பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்,காலை அஞ்சல் நாளிதழ் மற்றும் அதிரடி செய்தி புலனாய்வு மாத இதழ் ஆசிரியர் தேனி சை.ஹக்கிம் சேட் மரைக்காயர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

பேங்க் ஆப் மஹாராஷ்டிரா இராமநாதபுரம் கிளை மேலாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏஜென்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திருப்பாலை முனியசாமி,ஒருங்கிணைந்த சட்டமன்ற தொகுதி செயலாளர் பாலக்குமரன்,இராமேஸ்வரம் நகர் செயலாளர் முருகன்,மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க செயலாளர்,அதிரடி செய்தி புலனாய்வு மாத இதழ் மாவட்ட நிருபர் பிரவீன்குமார்,ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் மகேந்திரன்,ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் பஷீர் அஹமது,திருவாடானை சட்டமன்ற தொகுதி செயலாளர் முஹம்மது காதர்ஷா உட்பட மாவட்ட,நகர,ஒன்றிய,பேரூர்,கிளை பா.ம.க நிர்வாகிகள்,தொண்டர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.



