இராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஒன்றிய ரயில்வே துறை மந்திரியிடம் கே.நவாஸ்கனி எம்.பி நேரில் கோரிக்கை!!!

ஒன்றிய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி எம்.பி வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இந்த ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பரமக்குடி ரயில் நிலையம் ஒரு முக்கியமான இணைப்புப் புள்ளியாகும்.இந்த நிலையம்,சென்னைக்கு தினசரி பயணம் செய்யும் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் முக்கிய பகுதிகளுக்கும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது.ஏராளமான வணிகர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் வழக்கமான பயணத்திற்காக பரமக்குடி நிலையத்தை நம்பியுள்ளனர்.பரமக்குடி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் சேவைக்கு நிறுத்தம் இல்லாமல் குறிப்பிடப்பட்டிருப்பது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.பரமக்குடி ரயில் நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு,இராமேஸ்வரம்-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



