தமிழகம்மாவட்டச் செய்திகள்
மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம்!!!

எதிர்க்கட்சி தலைவர்களை பழி வாங்கும் நோக்கில் நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் பொய் வழக்கு பதிவு செய்த ஒன்றிய அரசை கண்டித்து இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அரண்மனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடந்தது.


மாவட்ட பொருளாளர்,பொறுப்புக்குழு உறுப்பினர் கவுன்சிலர் பி.ஆர்.என் ராஜாராம் பாண்டியன் (எ) கோபால் தலைமை வகித்தார்.இதில் இராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, தேசிய மகளிர் காங்.உறுப்பினர் ராமலட்சுமி,வட்டாரத்தலைவர்கள் காருகுடி சேகர்,சேதுராமன், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கந்தசாமி,சுப்ரமணியன்,மனித உரிமை துறை தலைவர் அபுதாஹிர்,ராணுவப் பிரிவு மாவட்ட தலைவர் ராஜகோபால், பட்டியல் இன பிரிவு மாவட்ட தலைவர் ராஜா,ஓபிசி அணி சட்டமன்றத் தொகுதி தலைவர் ஜெயக்குமார்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.



