தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தில் நாளை திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் கூட்டம்:காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிக்கை!!!

ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி,திமுக தலைமை அறிவிப்பின் படி சட்டமன்றத் தேர்தல் 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் நாளை காலை 9.30 மணி அளவில் ராமநாதபுரம் பாரதி நகர் பீமாஸ் வைஸ்ராய் மஹாலில் நடைபெற உள்ளது.ஆகவே இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட தொழில்துறையினர்,கல்வியாளர்கள்,விவசாயிகள்,மீனவர் சங்கப் பிரதிநிதிகள்,நெசவாளர்கள் தொண்டு நிறுவனங்கள்,சிறுகுறு தொழில் முனைவோர்கள்,புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,மாணவர் சங்கங்கள் சூழலியலாளர்கள், மருத்துவர்கள்,அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களது கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் பெற இருப்பதால் மேற்கண்ட அனைவரும் தவறாது கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை அளிக்க ஒன்றிய,நகர,பேரூர் திமுக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button