தமிழகம்மாவட்டச் செய்திகள்
அக்வா அக்ரி சமூக பொறுப்பு நிதி மூலம் அரசுப்பள்ளிக்கு கட்டமைப்பு வசதிகள்!!!

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ஊராட்சி ஒன்றியம்,மண்டபம் ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர் பாதுகாப்பு கருதி சுற்றுச் சுவர்,வகுப்பறைகளில் தரைத்தளம் அமைத்து தர பள்ளி மேலாண் குழு,பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை எழுந்தது.
அதைதொடர்ந்து அக்வா அக்ரி கடற்பாசி பதப்படுத்தல் நிறுவன (மானாமதுரை) சமூக பொறுப்பு மேம்பாட்டு நிதி (2024-25 ஆம் ஆண்டு) மூலம் இப்பள்ளி 2 ஆயிரம் அடி தரைத்தளத்திற்கு டைல்ஸ் கற்கள் பதித்தும், 60 அடி நீள சுற்றுச் சுவர் அமைத்து கொடுக்கப்பட்டது.நிறைவுற்ற தரைத்தளம்,சுற்றுச் சுவர் ஆகியவற்றை அக்வா அக்ரி நிறுவனர் அபிராம் சேத் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.அக்வா அக்ரி முதுநிலை மேலாளர் கடற்பாசி ஆராய்ச்சி முனைவர் செந்தில் ராஜன்,தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



