தமிழகம்மாவட்டச் செய்திகள்

மண்டபம் ஆராய்ச்சி நிலையத்தில் பயனாளிகளுக்கு 10 டன் கடல்பாசிகள் வழங்கும் நிகழ்வு!!!

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் சிஎஸ்ஐஆர் மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவன கள மையமான கடல் பாசி ஆராய்ச்சி நிலையத்தில், 10 டன் கப்பாபைகஸ் அல்வரேசி விதைப்பாசிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. தலைமை ஆராய்ச்சியாளர் முனைவர் வீரகுருநாதன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சிஎஸ்ஐஆர் மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவன கண்ணன் சீனிவாசன் வழங்கினார்.

கடந்த 2021ம் ஆண்டு முதல் இத்திட்டம் தொடங்கியதிலிருந்து உற்பத்தி இலக்கான 300 டன் கடற்பாசி எடைக்கு தற்போது வரை 250 டன் விதைப்பாசியை மீனவ மக்களுக்கு மத்திய உப்பு, கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ளது.

மண்டபம் கடற்கரை கிராமங்களில் . வசிக்கும் பயனாளிகளுக்கு 10 டன் விதைப்பாசிகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டன. 300 டன் உற்பத்தி இலக்கை அடையும் வரை, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் விதைப்பாசி வழங்கும் பணி தொடரும், பல்வேறு கிராமங்களில் இருந்து புதிதாக அடையாளம் காணப்பட்ட மீனவர்களுக்கு விதைப்பாசி விநியோகம் செய்யப்படும் என சிஎஸ்ஐஆர் மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கண்ணன் சீனிவாசன் கூறினார்.

மண்டபம் மீன்வளத்துறை, ,உதவி இயக்குநர் சிவக்குமார், அக்வா அக்ரி மானாமதுரை பிராசெசிங் லிமிடெட் நிறுவனர் அபிராம் சேத், மண்டபம் மரைன் எலிக்ஸர்ஸ் நிர்வாக இயக்குநர், வெங்கட் பாஹ்ல், ராமநாதபுரம் நபார்டு வங்கி மேலாளர் அருண்குமார், பேராசிரியர் (ஓய்வு) ரெங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button