தமிழகம்மாவட்டச் செய்திகள்

கீழக்கரையில் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில்,காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் உள்ள ஹனி மஹாலில் நகர்ப்புற உள்ளாட்சிக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா,துணை சேர்மன் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி கமிஷனர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார்.19-வது வார்டு கவுன்சிலர் சப்ஃராஸ் நவாஸ்,கீழக்கரை திமுக நகர் துணை செயலாளர் ஜெய்னுதீன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் வார்டு ஒன்றுக்கு 2 கிட்டுகள் வீதம் கிட்டு ஒன்று ரூ.50,000 என 42 கிட்டுகள் மொத்தம் ரூ.21,00,000 மதிப்பீட்டில் அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா,நகர் அமைப்பு ஆய்வாளர் ஸ்ரீராம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.முடிவில் கவுன்சிலர் மீரான் அலி நன்றி கூறினார்.

கவுன்சிலர்கள் எஸ்.கே.வி.ஹாஜா சுகைபு,சேக் உசேன்,டெல்சி,பயாஸ்,அயலக அணி துணை அமைப்பாளர் இப்திஹார் ஹசன்,நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் முஹம்மது நயீம் ஹக்தர் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button