தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரத்தில் பாஜக பட்டியல் அணி சார்பாக ஆர்ப்பாட்டம்:திமுக அரசை கண்டித்து நடந்தது!!!

ராமநாதபுரம்,பிப்.19:-

ராமநாதபுரம் மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பட்டியல் பழங்குடியினர் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்த திமுக அரசை கண்டித்து பட்டியல் அணி மாவட்ட தலைவர் சி.கே.பழனிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்தது.

பாஜக மாவட்டத் தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி,முன்னாள் மாநில செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர்கள் மகேஷ்,காளிராஜ்,பட்டியல் அணி மாவட்ட பொருளாளர் பாலகணபதி உட்பட மாவட்ட, நகர,ஒன்றிய,பேரூர்,கிளை பாஜக நிர்வாகிகள்,தொண்டர்கள்,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ஆளும் திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button