தமிழகம்மாவட்டச் செய்திகள்

ராமநாதபுரம் மீன்மார்க்கெட்டில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு:6.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்!!!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரில்,உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் தலைமையில் மீன்வளத்துறை ஆய்வாளர் கோமதி,மேற்பார்வையாளர் தமிழரசி மற்றும் மீன்வளத்துறை காவலர் உள்ளிட்டோர் சாலைத்தெருவில் உள்ள மீன் மார்க்கெட் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது உணவுப்பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் தெரிவித்ததாவது:-

மீன் விற்பனை செய்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற்று அதனை பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.விற்பனைக்காக கொள்முதல் செய்யப்படும் மீன்கள் கெடாமல் உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும்.கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யக்கூடாது.ஆய்வின் போது மீன்களில் எந்தவித வேதிப்பொருளும் கலக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு,கெட்டுப்போன மீன்கள் சுமார் 6.5 கிலோ கண்டறியப்பட்டு அதனை பறிமுதல் செய்து ராமநாதபுரம் நகராட்சி உதவியுடன் பினாயில் ஊற்றி அழித்துள்ளோம். மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்காக வைத்திருந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இனி வரும் காலங்களில் இது போன்று கெட்டுப்போன மீன்கள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button