தமிழகம்மாவட்டச் செய்திகள்

கடலாடி யூனியன் ஏனாதி கிராமத்தில் உணவு பொருட்கள் மதிப்பூட்டப்பட்டவையாக ஏற்றுமதி செய்யும் மையம்:செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு!!!

ராமநாதபுரம் மாவட்டம்,கடலாடி யூனியன்,ஏனாதி ஊராட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் மானிய திட்டத்தில் பனை உழவர் உற்பத்தியாளர் சங்கம் செயல்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தியாளர்கள் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த செய்தியாளர்கள் பயணத்தின் போது மாவட்ட கலெக்டர் பனை உழவர் உற்பத்தியாளர் சங்கம் மூலம் ரூ.25.15 லட்சம் மதிப்பீட்டில் சிறுதானியங்கள் பதப்படுத்தி மாவு அரைக்க கூடிய இயந்திரங்கள் 80 சதவீதம் மானியத்தில் வாங்கப்பட்டு சிறுதானிய உணவுப் பொருட்கள் பதப்படுத்தி மாவு பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை பார்வையிட்டு விவசாயிகளிடம் அதன் பயன்கள் மற்றும் வருவாய் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-


கடலாடி யூனியன் ஏனாதி கிராமத்தில் செயல்பட்டு வரும் உணவு பொருட்கள் மதிப்பூட்டப்பட்டவையாக ஏற்றுமதி செய்யும் மையத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானிய திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.தங்கள் பகுதிகளில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களின் தன்மைக்கேற்ப விவசாயிகள் ஒருங்கிணைந்து குழுக்கள் அமைத்து தேவையான உபகரங்களை மானிய திட்டத்தில் பெற்று உணவுப் பொருட்களை பதப்படுத்தி மதிப்பூட்டப்பட்ட பொருளாக மாற்றி ஏற்றுமதி செய்து போதிய வருவாய் பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கோபாலகிருஷ்ணன்,வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) இராஜா,வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) இராஜேந்திரன்,வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) பி.வாசுகி,உதவி பேராசிரியர் வேளாண் அறிவியல் நிலையம் முனைவர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button